நத்தை கறி கொடுத்த பிரபல உணவகம்

கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.

குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு பகுதியை உட்கொண்ட பின்னரே அந்த நத்தையை கண்டதாகவும் இது மிகவும் அருவருப்பான அனுபவமாக இருந்தது என பாதிக்கப்பட்ட நபர் முகநூலில் பகிர்ந்துள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த குறித்த நபர் அந்த உணவகத்தை தொடர்பு கொண்டு பின்னர் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த உணவகத்தின் மேலாளர் அரிசி பையில் பல நத்தைகளைக் கண்டுபிடித்ததாகவும், அவர் அரிசி விநியோகஸ்தர்கள் மீது குற்றம் சாட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor