அகவைநாளில் மகிழ்ந்திருந்த ஐஸ்வர்யாராய்!!

நடிகை ஐஸ்வர்யா ராயின் 46ஆவது பிறந்த தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

1973ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தெரிவுசெய்யப்பட்ட பின் அதிகளவான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டார். இயக்குனர் மணிரத்தினத்தின் இருவர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் பல வெற்றிப்படங்களையும் தந்துள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்த ஐஸ்வர்யா 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor