ட்ரம்ப் சீனாவுடனான பேச்சுவார்த்தை குறித்து கருத்து!

சீனாவுடனான முதல் சுற்று பேச்சுவார்த்தை குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் இடம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சிலியில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாடு நடைபெற்று வருகின்றது.

இதன் நிறைவில் குறித்த இடம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிலியில் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், தவிர்க்க முடியாத காரணத்தால் புதிய இடத்தைத் தெரிவு செய்வதற்காக சீனாவுடன் அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor