விஞ்ஞானிகளை நிலவில் தங்கவைக்க நாசா திட்டம்!

நிலவில் நான்கு விஞ்ஞானிகளை இரண்டு வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பேசிய நிலவு ஆராய்ச்சி பகுப்பாய்வுக் குழுவினர், 2024ஆம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தின் படி 2 வீரர்கள், ஆறரை நாட்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நிலவில் தண்ணீர் தொடர்பாகவும், இதர அறிவியல் ஆராய்ச்சிகளையும் குறித்த வீரர்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 2030ஆம் ஆண்டுக்குள் 4 வீரர்களை நிலவுக்கு அனுப்பி 14 நாட்கள் வரை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அந்தக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor