ஐ.தே.முன்னணி- சந்திரிக்கா புரிந்துணர்வு உடன்படிக்கை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது

கொழும்பில் இன்று காலை இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றினை அமைத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்திருந்தது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor