தாய்க்கு வரன்தேடும் இளம்பெண்!!

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் தனது தாய்க்கு 50 வயதான அழகான மணமகன் தேவை என வெளியிட்டுள்ள பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

ஆஸ்தா வர்மா என்ற இளம் பெண் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

மேலும், தனது தாய் திருமணம் செய்து கொள்ள 50 வயதான அழகான நபர் தேவை என அந்த பதிவில் தெரிவித்தார்.

இதோடு அந்த மணமகன் சைவம் மட்டும் சாப்பிடுபவராகவும், மது பழக்கம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் ஆஸ்தா வர்மா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவானது கிட்டத்தட்ட 14000 லைக்குகள் மற்றும் 4000 மறு பதிவுகளை அள்ளி வைரலாகியுள்ளது.

தாய்க்கு ஏற்ற துணையை தேடும் ஆஸ்தா வர்மாவை பலரும் பாராட்டி வருவதோடு, அவர் எதிர்பார்க்கும் வரன் கிடைக்கும் என வாழ்த்தியுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor