உலகில் வயதானவர் உயிரிழப்பு.

ரஷ்யாவின் அஸ்ட்ராஜன் பிராந்தியத்தில் உள்ள இஸ்லமாசி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான்சிலியா பிசம்பேயவா.

123 வயதான இவர், உலகிலேயே வயதான பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரர். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி பிறந்த இவர், கடந்த மார்ச் மாதம் தனது 123 வது பிறந்த நாளை கொண்டாடினார். 4 குழந்தைகளின் தாயான அவர், தனது இளைய மகனுடன் வசித்து வந்தார்.

பிசம்பேயவாவுக்கு 10 பேரக்குழந்தைகள், 15 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். 3 நூற்றாண்டுகளை கண்ட அவர் இறந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

பிசம்பேயவாவின் சாதனையை முறியடித்து வாழ்ந்த பெண்ணும் ரஷ்யாவை சேர்ந்தவரே. அங்குள்ள கபார்டினோ பால்கரியாவை சேர்ந்த 127 வயதான நானு ஷாவோவா, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்