நேரலையாக ஒளிபரப்பிலே உயிர் போனது

ஜப்பானின் மிக உயரிய மலையான புஜியில் ஏறிய காட்சியை நேரலையாக ஒளிபரப்பிய நபர் ஒருவர், கீழே சறுக்கி விழுந்து பலியானார்.

12,388 அடி உயரம் கொண்ட புஜி மலையில் குளிர்காலத்தில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை பொருட்படுத்தாமல் டெட்ஜோ என்ற நபர் ஒருவர், புஜி மலையில் ஏறும் முயற்சியில் திங்கள்கிழமை மதியம் ஈடுபட்டார்.

மலை மீது ஏறியபோது அவர், திடீரென சறுக்கி கீழே விழுந்தார். பின்னர் அவருடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

இந்த காட்சிகள் அனைத்தையும் செல்போன் மூலம் யூ.டியுப் தளத்தில் அவர் நேரலையாக ஒளிபரப்பினார். இந்நிலையில் அவரின் உடல், புஜி மலையின் ஷிஜுகோ பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor