சஜித்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பழங்குடி ஆதிவாசிகள்!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளிப்படுத்தி ஒன்றிணைந்திருக்கின்றனர்.

இந் நிலையில், பழங்குடி ஆதிவாசிகள் குழுவொன்றும் நேற்றைய தினம் சஜித்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மகாஓயா மற்றும் அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்த பழங்குடி ஆதிவாசிகள், சஜித் பிரேமதாஸவிற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட திஸ்ஸ அத்தநாயக ,

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து தற்போதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரும் எம்முடன் இணைந்துகொண்டிருக்கின்ற அதேவேளை சிவில் சமூக அமைப்புக்களும் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்தவொரு குழுவினருடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு தரப்பினரையும் எம்மோடு இணைத்துக்கொண்டு நாட்டை முன்நோக்கிப் பயணிக்கச் செய்வதே எம்முடைய ஒரே நோக்கமாக இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவைப் பொறுத்தவரை எவ்வாறேனும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை மாத்திரமே இலக்காகக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சஜித் பிரேமதாஸ சாதாரண வறிய மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, அந்த சமூகத்தினருக்கு அவசியமான உதவிகளை வழங்கி, சுபீட்சமானதொரு இலங்கையை உருவாக்க முயற்சிப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor