யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் !

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

சிவில் அமைப்புக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கி உள்ள அவர், தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர் நேற்றைய தினம் யாழில் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மகேஸ் சேனநாயக்க பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்.

இதேவேளை, நேற்று புகையிரத்தில் யாழ்ப்பாணம் வந்தபோது, புகையிரத பயணிகளிற்கும் அவர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor