சுஜித்தின் மரணத்திற்கு அங்கஜன் இரங்கல்.

இந்திய மண்ணில் ஆழ் குழி கிணற்றுக்குள் வீழ்ந்து உயிர் திறந்த சிறுவன் சுஜித்தின் மரணம் தொடர்பில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் இரங்கல் அறிக்கையில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆழ் குழிக்குள் அவிந்துபோன பச்சிளம் பாலகன் சுஜித்தின் மரணம் எம் மனங்களில் ஒங்கி அறைந்துள்ளது.

கோடி மக்கள் கூடியும் குற்றுயிராய் கூட மீட்கமுடியாத துன்பியலான நிமிடங்களோடு நாட்கள் நகர்ந்து மரணத்தை முத்தமிட்ட இந்திய மண்பெற்ற தமிழ் முத்தொண்று மண்ணை முத்தமிட்டுவிட்டது.

ஆயிரம் யானை பலத்தைக்கொண்ட வல்லரசுகளின் பட்டியலில் தடம்கொண்ட இந்தியா ஆழ் குழிக்குள் நவிந்துபோன சிறுவனை மீட்க முடியாது போனது எம் மனங்களில் ஆணி அறைந்துள்ளது.

உப்பிப் பெருத்த விசாலமான இப் பூமிப் பந்தில் சுஜித்தும் தனக்கான தடம் கொண்டு வாழப் பிறந்தவன்.

புவியியல் ரீதியான முழுமையான கரிசனைகள் காட்ட தவறியமையே சுஜித்தின் மரணம் சொல்லி நிற்கிறது.

இவ்வாறன மரணங்கள் மூலம் எமது சந்ததியின் இருப்புக்கள் நிலை குலைந்து போவதற்க்கான வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றன.

சுஜித்தின் மரணத்தால் ஆழ்ந்து எழுந்திட முடியாது தவிக்கும் பெற்றோரின் வலிகளை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்.

பெற்றவர்களின் கண் முன்னே மெல்லென நடைபயின்று காலவோட்டத்தில் ஒரு மனிதனாக வாழ வேண்டியவன் இன்று அதள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு இருண்ட சூனியத்துக்குள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

தாய் தேசமானதும் தொப்புள்கொடி சொந்தமுமாகிய இந்திய தமிழர்களின் கண்களில் கண்ணீர் கசிந்திடும் போது எம் மனங்களையும் நனைத்தே செல்கிறது.

ஆண்டாண்டு காலம் பாட்டன் முப்பாட்டன் காலம் தொட்டு எமது உறவென்பது இந்திய வாழ் தமிழ் மக்களோடு பின்னிப் பிணைந்தது யாவரும் அறிந்ததே.

அதன் அடிப்படையிலே நாம் இன்று வார்த்தைகளைக்கூட வரித்திட முடியா துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.

ஆழியில் அமுக்கப்பட்ட சுஜித்தின் ஆண்மாவுக்கு பதில் சொல்லிட முடியாத கைங்கரியமற்றவர்களாக நாம் இருப்பதோடு

குடும்பத்தின் துயரத்தையும் எம்மோடு கட்டியணைத்துக்கொள்கின்றோம்.


Recommended For You

About the Author: ஈழவன்