அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் 4 பேரின் பிணங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்த 4 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. எனவே அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர்களை சுட்டுக் கொன்றது யார்? எதற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து போலீஸ் விசாரணை நடைபெறுகிறது


Recommended For You

About the Author: Editor