இரண்டு பன்றிகளில் எந்த பன்றி நல்லம்?

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் பெருந்தேசிய கட்சிகள் சார்பாக போட்டியிடுகின்ற இரண்டு வேட்பாளர்களுமே கள்ள பன்றிகள்தான்.

ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டில் ஒரு பன்றியைத்தான் தமிழர்கள் ஆதரிக்க வேண்டி உள்ளது. எந்த பன்றி இதில் நல்ல பன்றி என்கிற கேள்விக்கு இதற்காக விடை காண வேண்டி உள்ளது. ஆனால் நாம் ராஜபக்ஸக்கள் மாத்திரம்தான் கெட்டவர்கள் என்றும் பிரேமதாஸக்கள் நல்லவர்கள் என்றும் ஒரேயடியாக முடிவெடுத்து விட முடியாது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடித்து வைத்தவர்கள் ராஜபக்ஸக்கள் என்றால் யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் பிரேமதாஸக்கள். அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது அந்த அரசாங்கத்தில் பிரதமராக விளங்கியவர் சஜித் பிரேமதாஸவின் அப்பா ரணசிங்க பிரேமதாஸ. ஜனாதிபதியாக வந்த பின்னர் ரணசிங்க பிரேமதாஸவும் யுத்தத்தை கொண்டு நடத்தினார். அவருக்கு பின்னர் டி. பி. விஜயதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் யுத்தத்தை தொடர்ந்து மேற்கொண்டார்கள். சந்திரிகாவின் காலத்தில் கொஞ்ச காலம் யுத்தம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது என்பது வேறு விடயம். ஐக்கிய தேசிய கட்சியின் தலைகளில் டி. பி. விஜயதுங்கவும் ஒருவர். இன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பு வேட்பாளர் சஜித் பிறேமதாஸவின் நேச சக்தியாக சந்திரிகா செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்ஸக்கள் என்றால் தமிழர்களுக்கு எதிரான இன கலவரங்களை குறிப்பாக கறுப்பு ஜூலை கலவரத்தை நடத்தியவர்கள் பிரேமதாஸக்கள். குமுதினி படகு படுகொலையையும் பிரேமதாஸக்களே நடத்தினர்.மனித பேரழிவைதான் ராஜபக்ஸக்கள் நிகழ்த்தினார்கள், ஆனால் தமிழ் மக்களின் அறிவு பொக்கிசமாகிய யாழ். நூலகத்தை பிரேமதாஸக்கள் எரித்து சாம்பலாக்கினார்கள். இறுதி யுத்தத்தின்போது சரண் அடைந்த தமிழ் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று பார்த்தால் கறுப்பு ஜூலை கலவரத்தின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் குத்தியும், வெட்டியும் பிரேமதாஸக்களால் கொல்லப்பட்டார்கள். யுத்த குற்றங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று பார்த்தால் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் தொடர்பாக இது வரை எவரும் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படவே இல்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ராஜபக்ஸக்கள் மரண சான்றிதழ் கொடுக்க முயன்றனர் என்று பார்த்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை இராணுவம் தகனம் செய்வதற்கான அனுமதியை சட்டமாக்கி வழங்கியவர்கள் பிரேமதாஸக்கள். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் இளையோர்களை சிறைக்குள் தள்ளியவர்கள் ராஜபக்ஸக்கள் என்று பார்த்தால் அவசர கால சட்டத்தை தீவிரப்படுத்தியவர்களும், பயங்கரவாத தடை சட்டத்தை அறிமுகம் செய்தவர்களும் பிரேமதாஸக்கள்தான். நவாலி தேவாலய படுகொலை, சன்னிதி தேர் எரிப்பு, செஞ்சோலை படுகொலை ஆகியவற்றை நடத்திய சந்திரிகா இன்று பிரேமதாஸவின் கூடாரத்துக்குள்தான் இருக்கின்றார்.

ஆனால் ராஜபக்ஸக்கள் போரால் அழிந்து போன வட மாகாணத்தை புதுப்பித்து தந்தார்கள். குண்டு வீச்சுகளில் சிதைந்து போன பாடசாலைகள், ஆலயங்கள், அலுவலகங்கள் போன்றவற்றை மீண்டும் உருவாக்கி தந்தார்கள். யாழ். பொது நூலகத்தை புனரமைத்து தந்தார்கள். முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு வழங்கி விடுவித்தார்கள். தமிழ் இளையோர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கினார்கள். ஆனால் பிரேமதாஸக்களால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பரிகாரங்களும் செய்து தரப்படவே இல்லை. ஆகவே இரு கள்ள பன்றிகளிலும் எந்த பன்றி பரவாயில்லை என்பதை உள்ளபடி உணர்ந்தவர்களாக தமிழ் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டி உள்ளது


Recommended For You

About the Author: Editor