தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து 38 பேர் கைது!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 32 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளையில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேர்தல் சட்டங்களை மீறிய 48 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor