இந்தியாவிற்கு துணை நிற்போம் : ஐரோப்பிய குழு உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு துணை நிற்போம் என காஷ்மீர் கள நிலைவரம் குறித்து ஆய்வு செய்யும் ஐரோப்பிய ஒன்றிய குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 23 உறுப்பினர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த குழு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குறித்த குழுவினர், “பயங்கரவாதம் என்பது உலகளாவிய அச்சுறுத்தலாகும், அதை எதிர்த்துப் போராடுவதில் நாம் இந்தியாவுடன் நிற்க வேண்டும். ஐந்து அப்பாவி தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கொன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.

எங்கள் குழு இராணுவம் மற்றும் பொலிஸார் மற்றும் இளம் ஆர்வலர்களிடமிருந்து ஒரு விளக்கத்தைப் பெற்றது மற்றும் அமைதி பற்றிய கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor