கெமரூனில் மண்சரிவு – 33 பேர் உயிரிழப்பு!

கெமரூனில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெமரூனின் அண்டை நாடான மத்திய ஆபிரிக்க குடியரசில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 30,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தநிலையிலேயே மண்சரிவு காரணமாக இதுவரையில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு பிராந்தியத்தின் ஆளுநர் ஆவா ஃபோன்கா அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நேற்றிரவு கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 33 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இரவில் நிகழ்ந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சுகிறோம்.

இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் முக்கியமான ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மழையின் காரணமாக மண்சரிவில் இடிந்து விழுந்த வீடுகள் அனைத்தும் மலையின் ஓரத்தில் ஆபத்தான இடத்தில் கட்டப்பட்டிருந்தது ஒரு காரணம்.

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை இப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் இப்பகுதி மிகவும் ஆபத்தானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor