கலிபோர்னியாவில் அதியுயர் சிவப்பு எச்சரிக்கை!!

கலிபோர்னியாவின் சில பகுதிகளுக்கு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் காலநிலை சேவைகள் நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தின் தெற்குப் பிராந்தியத்திற்கு இவ்வாறு அதியுயர் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக லொஸ் ஏஞ்சல்ஸ், வென்டூரா, சான் பேர்னாண்டினோ ஆகிய பிரதேசங்களுக்கே இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், கலிபோர்னியா மாநிலத்தின் தெற்குப் பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 128 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தீ பரவுவதை விரைவுபடுத்தும் எனக்கருதப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, சொனாமா, விண்ட்சர், சென் பிரான்சிஸ்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 74,000 ஏக்கர் நிலங்கள் தீயில் கருகியுள்ளன.

மேலும் சுமார் 123 வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீயினால் சேதமடைந்துள்ளன. இதனால் லொஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட நகரங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

பாதுகாப்பு கருதி 9,70,000 வீடுகளின் மின் இணைப்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக சுமார் 6 இலட்சம் வீடுகளின் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor