பல்கலைக்கழகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

நேற்று இரவு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தொழில்நுட்ப பீட மாணவர்கள் முற்றுகையிட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கீழான பம்பைமடுவில் உள்ள தொழில்நுட்பபீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக கடந்த 4 நாட்களில் 70 வரையான மாணவர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன், 16 மாணவர்கள் வைத்தியசாலையில தங்கி சிகிச்சையும் பெற்றுள்ளனர்.

தற்பொழுது மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நோய் தொற்று காரணமாக மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

இதன்காரணமாக பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் சுமார் 80 மாணவர்கள் வளாகத்தின் பூங்கா வீதியில் உள்ள வளாக முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து பொலிசார் தலையிட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.


Recommended For You

About the Author: Editor