குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுப்பிடித்தால் பரிசு!

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுப்பிடிப்பவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசின் தகவல் தொழிநுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தீபாவளி, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சோகமாக அமைந்துவிட்டது. அலட்சியத்தால் மீண்டும் விலைமதிப்பற்ற ஒரு உயிரை இழந்துவிட்டோம்.

இதுவே இந்தியாவில் உயிரிழந்த கடைசி குழந்தையாக இருக்கவேண்டும். இதனை தடுப்பதற்கு அவசரமாக நமக்கு தீர்வு தேவைப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை இதற்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு, சுரங்கங்களில் விழும் குழந்தைகளை மீட்க உதவும் சிறந்த கருவியை உருவாக்கினால் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் முதல் பரிசாக 5 இலட்சம் ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளோம். தனிநபர், புதிய நிறுவனங்கள், கம்பெனிகள் என யார் உதவினாலும் பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor