சுகம் அனுபவிக்க தடையான இருந்த பிள்ளை அண்டாவுக்குள்

ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த தம்பதி ராமச்சந்திரன் – காவ்யா. ராமச்சந்திரன் ஒரு கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது, 4 வயதில் தருண் என்ற குழந்தையும் இருந்தான்.

இப்போது காவ்யாவின் வயசு 25. கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கணவரை பிரிந்த காவ்யா குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.

போன வருடம், ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து காவ்யா படித்து வந்தார். அப்போது, தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.

2 வருஷத்தில் அது தீவிரமான காதலாக உருவாகி, போன ஜனவரி மாதம் கோயிலில் வைத்து கல்யாணம் செய்துகொண்டனர். அதுமுதல் தியாகராஜனும் காவ்யாவும் குழந்தையை வைத்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

ஆனால் இவர்களின் சந்தோஷத்துக்கு இடையூறாக குழந்தை இருப்பதாக உணர்ந்த இருவரும் கொலை செய்ய திட்டம் போட்டனர். இதற்காகவே வீட்டை காலி செய்து, வேறு ஒரு இடத்திற்கு குடி வந்தனர்.

கடந்த 13-ந்தேதி தருண் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, குழந்தையை தூக்கிக் கொண்டு போய் சில்வர் அண்டாவில் மூழ்கடித்தனர்.

குழந்தை திணறியபோதும், அதை பற்றி கவலைப்படாமல் இருவரும் அண்டாவுக்குள் குழந்தையை மூழ்கடித்தனர். சிறிது நேரத்தில் மூச்சு திணறிய குழந்தை துடிதுடித்து அண்டாவுக்குள்ளேயே பரிதாபமாக இறந்தது.

இறந்த குழந்தையை தூக்கி அரிசி மூட்டையில் கட்டி, பைக்கில் எடுத்து சென்று பாலாறுக்கு பக்கம் ஒரு குழியைதோண்டி புதைத்தனர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததே காவ்யா குடும்பம் உட்பட யாருக்குமே தெரியாது. இந்நிலையில், காவ்யாவின் தாய் வீட்டுக்கு வந்து, குழந்தை எங்கே என்று கேட்டார்.

ஆரம்பத்தில் மழுப்பினாலும், அம்மாவின் கண்டிப்பான கேள்வியால், உண்மையை சொல்லிவிட்டார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் காவ்யா சரணடைந்தார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் இது சம்பந்தமான விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால் விஷயத்தை கேள்விப்பட்டதுமே தியாகராஜன் தலைமறைவாகி விட்டார்.

அவரை போலீசார் வலைவீசி தேடிவருவதுடன், குழந்தையின் உடலை தோண்டி எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். எல்லாம் காமம் செய்யும் வேலை


Recommended For You

About the Author: Editor