வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது! 7பேர் வைத்தியசாலையில்!

முல்லைத்தீவு முள்ளியவளை 01 ஆம் வட்டாரப் பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதி நிகழ்வின் பின்னர் அங்குஇரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தில் ஏழு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி வாள்வெட்டுவரை சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


Recommended For You

About the Author: Editor