அவலமான உண்மை!!

உத்திர பிரதேசத்தில் வகுப்பு தொழிகள் தன்னை புறக்கணித்ததால் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் மெயின்பூர் அருகே இருக்கும் பள்ளி விடுதியில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலின் பெயரில் மாணவியின் உடலைக் கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து குறித்த மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. தான் மூன்று வருடங்களுக்கு செய்த தவறுக்கு இப்போது வரை தண்டனை அனுபவித்து வருகின்றேன். யாரும் மன்னிக்கவில்லை என்றும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால், சக மாணவிகளுடன் என்னால் 12ம் வகுப்பினை தொடர முடியாது என்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக எழுதியுள்ளார்.

இதுகுறித்து சக மாணவி ஒருவர் கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குறித்த மாணவி வேறொரு மாணவியின் திண்பண்டத்தினை திருடிவிட்டதால், மூத்த மாணவிகள் 48 பேர் அவரை அடித்ததாக தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor