பதவி விலகினார் லெபனான் பிரதமர்!!

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக லெபனானின் பிரதமர் சாட் அல் ஹரிரி அறிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் பிரதமர் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தவிர்க்கவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மிஷேல் ஆவுனுக்கு அனுப்பவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வட்ஸ்அப் அழைப்புகளுக்கு வரிவிதிக்கும் திட்டங்களுக்கு எதிராகத் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் பின்னர் அரசியல், ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டன.

ஆர்ப்பாட்டங்களினால் 10 நாட்களுக்கும் அதிகமாக வங்கிகள், அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor