ஈராக்கில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி சூடு – 14 பேர் பலி.

ஈராக்கில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக் அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் இந்த மாதத் தொடக்கத்தில் பெரும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

அரசில் நடைபெறும் ஊழல் மற்றும் அரசு சேவைகளைப் பெறுவதில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஐந்து நாட்களாக பொதுமக்கள் சாலைகளை பெருந்திரளாகக் கூடி அரசாங்கத்திற்கு எதிராக கோஷமிடுகின்றனர்.

இந்நிலையில், இன்று அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கர்பாலாவில் ஏராளமான போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டனர்.

இதன்போது ஈராக் பாதுகாப்புப் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், 14 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 865 பேர் காயம் அடைந்துள்ளனர் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்