ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் மோடியுடன் கலந்துரையாடல்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர்.

குறித்த குழுவினர் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீரின் நிலைமை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் பேசிய மோடி, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அல்லது நிதியளிக்கும் அமைப்புகளுக்கும், பயங்கரவாதத்தை ஒரு தேசிய கொள்கையாகப் பயன்படுத்தும் அனைத்து அமைப்புகளுக்கும் எதிராக அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாம் பயங்கரவாதத்தை சகித்துக்கொண்டிருக்ககூடாது.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நியாயமான மற்றும் சீரான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது அரசின் முக்கிய நோக்கமாகும் என கூறினார்.


Recommended For You

About the Author: Editor