இங்கிலாந்தில் வெள்ள அபாய எச்சரிக்கைகள்!!

நாடு முழுவதும் 82 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன் வார இறுதியில் பெய்த கடும் மழையினால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்தன் பின்னர் 117 எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

கடும் மழையின் விளைவாக வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன் ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் மிட்லன்ட்ஸில், செவர்ன் நதிக்கு செவ்வாய்க்கிழமை வரை வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளதுடன் வை மற்றும் ட்ரென்ட் நதிகளுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள் எதிர்பார்க்கப்படுவதுடன் சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக சுற்றுச்சூழல் நிறுவனம் அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor