தபால்மூல வாக்களிப்பு நிலையங்களில் விசேட கண்காணிப்பு!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தபால்மூலம் வாக்களிக்க தெரிவு செய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் விசேட கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய வாக்குப்பதிவு இடம்பெறும் மத்திய நிலையத்தின் பணிகளை கண்காணிக்கவும் நடமாடும் சேவையின் ஊடாக கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் 1ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

மாவட்ட செயலகம், தேர்தல்கள் செயலகம் மற்றும் குறிப்பிட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தபால்மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 7ஆம் திகதி தத்தமது தொழில் நிறுவனம் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கூடுதலான தபால் மூல வாக்களர்கள் உள்ள இராணுவ முகாம், கல்வி நிறுவனங்கள், இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இடங்களில் தேர்தல் கண்காணிப்பாளர்களை பெருமளவில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதேபோல் தாபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினங்களில் நாடு தழுவிய நடமாடும் சேவை ஒன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor