சஜித் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டார் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்வைத்த நேரடி விவாத சவாலை ஏற்கத் தயார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ஷ விவாதத்திற்கு வருவதற்கு பயம் என்றால் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாருங்கள் அதுவும் இல்லை எனில் பசில், நாமல், சிராந்தி என அனைவரையும் அழைத்து வருமாறு” சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

சஜித் பிரேமதாசவின் குறித்த காணொளியை பகிர்ந்து, இந்த சவாலை தான் ஏற்றுக்கொளவதாக நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, “சஜித் பிரேமதாசவுடன் விவாதத்திற்கு வருவதற்கு எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் விவாதத்தை நடத்துவது சிறந்தது. அதுவரை நீங்கள் இப்போது ஒரு விவாதத்தை வலியுறுத்தினால், நான் தயாராக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor