காணாமல்போன ரூபவாஹினி தலைவரின் அறிக்கை!

ரூபவாஹினி தலைவர் இனோகா சத்தியங்கனி தொடர்பாக நடைபெறும் விசாரணை அறிக்கை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஊடக விதிமுறைகளை மீறும் வகையில் அவர் செயல்பட்டமை குறித்த அறிக்கையே இவ்வாறு காணமல் போயுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் விசாரணை இயக்குநர் விஜித மாயாதுன்ன விசாரணை நடத்தி, ஜனாதிபதி செயலாளருக்கும் பாதுகாப்பு செயலாளக்கும் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கை காணாமல்போயுள்ளது.

இதேவேளை விசாரணை அறிக்கையின்படி, இனோகா சத்தியங்கனி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஊடக விதிமுறைகளை மீறி ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டை தேசிய தொலைக்காட்சியின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பியதாக ரூபவாஹினி தலைவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த நேரடி ஒளிபரப்பை இடையில் நிறுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதற்கமைய அந்த ஒளைபரப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னரான தேர்தல் ஆணைக்குழுவின் விசாரணையின் போது பணம் பெற்றுக்கொண்ட பின்னர் குறித்த நிகழ்ச்சியை தாம் ஒளிபரப்பியதாக இனோகா சத்தியங்கனி தெரிவித்திருந்தார்.

இதற்கமைய பணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டுக்களை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு தலைவரிடம் தெரிவித்துள்ள நிலையில் , அந்த வேண்டுகோளை இனோகா சத்தியங்கனி நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor