போதை பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது!!

திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நேற்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கஜபா மாவத்தையில் 32 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த சந்தேக நபர் மற்றும் சமகி மாவத்தையில் 12 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டது.

இதன் போது பியகம பகுதியை சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரொருவரும் கொழும்பு 15 ஐ சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கிரான்பாஸ் பகுதியில் 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கல்பிட்டிய பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கந்தக்குளிய பிரதேசத்தில் 41 கிராம் ஹெராயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டிய பொலிசார் குறிப்பிட்டனர்.

தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor