மலேசியாவில் வெள்ளத்தால் 6 மாநிலங்கள் பாதிப்பு.

மலேசியாவின் 6 மாநிலங்களில், வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அரசாங்கத்தின் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் கோலாலம்பூர் மற்றும் கிளாங் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பாதிப்புக்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜொகூர், பினாங்கு, பேர்னாமா, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

தொடர்ந்தும் பாதிக்கப்பட்டோரின் வருகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தற்காலிக நிவாரண நிலையங்களை வேறு இடங்களுக்கு மாற்றி வருவதாக அதிகாரிகள் கூறினர்.

நிவாரண முகாம்களில் பாடசாலை மற்றும் தொழுகை இட வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்