தமிழ் மக்கள் பௌத்த துறவிகளிடம் செல்ல காரணம் என்ன?

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கையாலாகாதவா்களாக உள்ளமையினாலேயே தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்காக சிங்கள மக்களை நாடி செல்லவேண்டிய நிலை உருவானது என நாடாளுமன்ற உறுப்பினா் வியாழேந்திரன் கூறியுள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் அண்மைக்கால போராட்டங்களில் பௌத்த மதகுருமாரின் பிரசன்னம் காணப்படுகின்றமை தொடர்பாக தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினாா்.

அவர் தொடர்ந்தும் கருத்த தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தமிழ் தலைமைகள் கையாலாகாதவர்களாவும் வினைத்திறன் அற்றவர்களாகவும் இருக்கின்றமையினால் தமிழ் மக்கள்

பௌத்த மதகுருமாரை நாடிச் செல்கின்றனர்.அதேபோன்று அரசியல் தலைமைகள் தயக்கம் காட்டுகின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் பௌத்த மதகுருமார் வலுச்சேர்த்து வருகின்றனர்.

குறிப்பாக மீராவோடை காணிப் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளில் தமிழ் தலைமைகள் நல்லிணகம் என்று கூறிக்கொண்டு ஓளிந்திருக்கையில் பௌத்த மதகுருமார் தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.

ஆகவே, தமிழ் தலைமைகள் சரியாக செயற்பட்டால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை சரியாக அணுகினால் தமிழ் மக்கள் அவர்களை நாடிச் செல்ல வேண்டிய தேவையில்லை” என்று தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor