நாட்டை அழிவுக்கு கொண்டு சென்றது ஐக்கிய தேசிய கட்சியே ..

யாழ்.பொது நூலகத்தை எரித்தது ஐக்கிய தேசிய கட்சியே. அதற்கு அவர்கள் பொறுப்பு கூற தயாரா ? என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்சே கேள்வி எழுப்பி இருந்தார்.
யாழ்.றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் விளையாட்டு கழக மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வேறு எந்த தலைவரையும் விட அதிகமாக யாழ்ப்பாணம் வந்தது நான் தான். யாழ் மக்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. 1970களிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணம் வந்துள்ளேன். பின்னர் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் யாழ்ப்பாணம் வந்தேன். அப்போது யாழ்,மாநகர முதல்வராக அல்பிரேட் துரையப்பா இருந்தார்,

வடக்கிலே விவசாயிகளிற்கு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சி காலமே நல்ல காலமிருந்தது. சிறிமாவோவை விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். வடக்கிலுள்ள மீனவர்களிற்கும் அப்போது செழிப்பாக வாழ்தார்கள். 1978இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வசதிகளை வடக்கு மக்களிடமிருந்து பறித்து விட்டது.

அந்த ஆட்சியை எற்படுத்த மிகவும் உதவிய தமிழர்களையே பழிவாங்கினார்கள். வடக்கு மக்களின் ஜனநாயகத்தை பறித்தார்கள். இளைஞர்கள், விவசாயிகளை வீதிக்கு இழுத்து விட்டார்கள்.

யாழ் நூலகத்தை எரித்தார்கள். அந்த பெறுமதியான நூலகத்தை எரித்ததை முழுமையாக ஐ.தே.க பொறுப்பெடுக்க வேண்டும். அதன்பின் நடந்ததை நான் உங்களிற்கு சொல்ல வேண்டியதில்லை.

ஏ9 வீதி மூடப்பட்டது. வெளிநாட்டு படைகள் இலங்கைக்கு வந்தனர். 30 வருடம் யுத்தம் நடந்தது. இங்கு மட்டுமல்ல தெற்கிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்தன. அவற்றை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம்.
அதன் பின்னர் ஏ9 வீதியை திறந்து, வீதிகளை, பாலங்களை புகையிரத நிலையங்களை அமைத்து நாம் வசதியை ஏற்படுத்தினோம்.

மாகாண சபையை பெற்று தந்தோம் ஆனால், வடமாகாணசபையில், வேலைகள் நடந்ததா என தெரியாது. ஆனால் உங்களிற்கு அதை பெற்றுத்தந்தோம். என தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்