யேர்மனியில் இடம்பெற்ற நடன ஆற்றுகை தேர்வு!

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.6.2019 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இத் தேர்வினை பரதக்கலையில் 7ம் தரத்தை நிறைவு செய்திருந்த ஆறு தமிழாலய மாணவிகள்; பங்குபற்றியிருந்தனர்.

இத் தேர்வினை சுவிசில் உள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், யேர்மனி பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்தியிருந்தன.

  • தமிழாலய நடன ஆசிரியை திருமதி.சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகளான
  • செல்வி. விவேகா மகேந்திரகுமார்.
  • செல்வி காருண்யா நவராசா.
  • செல்வி. தினோஜா திருச்செல்வம்.
  • அவர்களும் தமிழாலய நடன ஆசிரியை திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவிகளான
  • செல்வி. மீரா செல்வரட்ணம்.
  • செல்வி.பிரியந்தினி சிறிகாந்தன்.
  • செல்வி.மேருஜா மகாலிங்கம்.

ஆகியோர் தங்களின் ஆற்றுகையை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர்.


Recommended For You

About the Author: Editor