இராணுவ வீரர்கள் தான் என்னுடைய குடும்பம்- மோடி!

இந்திய ராணுவ வீரர்கள் தான் என்னுடைய குடும்பம், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண விரும்புகிறேன் என காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரெஸ் ராணுவ முகாம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளியை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடுவது ஒரு பாரம்பரியம் . அதை ராணுவ வீரர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். ஆகவே இங்கு வந்துள்ளேன். நீங்கள் தான் என் குடும்பம். நாட்டில் பல எல்லைப்பகுதிகள் உள்ளன.

ஆனால் நீங்கள் இருக்கும் இந்த பகுதி தனித்துவமானது. போர் , ஊடுருவல் உட்பட அனைத்தையும் அனுபவிக்க வேண்டி இருக்கும். இந்த பகுதி தோல்வியை பார்த்திராத பகுதி. வெல்ல முடியாத பகுதி. தற்போது நேரம் மாறி விட்டது.

நமது ஆயுதப்படைகள் நவீனமாக இருக்க வேண்டும்.நமது ஆயுதங்களும் வெடிமருந்துகளும் நவீனமாக இருக்க வேண்டும். நமது வீரர்களின் முகங்களில் எந்த விதமான அழுத்தங்களும் இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார். 015-ம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

2016-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை இமாச்சலப் பிரதேசம் மாநில எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அதைதொடர்ந்து, 2017-ம் ஆண்டு மீண்டும் குரெஸ் ராணுவ முகாமிலும் 2018-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடனும் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.


Recommended For You

About the Author: Editor