தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 1923 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று பிற்பகல் 4 மணிவரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கும் அத்துடன், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கும் கிடைக்கப்படும் முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாகவே பதிவாகியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor