ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி அல்பெர்டோ பெர்ணான்டஸ்

ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக அல்பெர்டோ பெர்ணான்டஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆர்ஜென்டினாவில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 45 வீத வாக்குகளைப் பெற வேண்டிய நிலையில், அல்பெர்டோ பெர்ணான்டஸ் 48 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதியான மொரிசியோ மெக்ரி 40 வீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இந்த நிலையில், வெற்றி பெற்றுள்ள அல்பெர்டோ பெர்ணான்டஸ் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor