கொலம்பியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து!!

கொலம்பியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியாவின் பலன்கியூரோ இராணுவத் தளத்தில் இருந்து கடந்த விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகொப்டர் 6 பேருடன் புறப்பட்டது.

ஹெலிகொப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, மாயமான ஹெலிகொப்டரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அல்பன் பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர்.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor