இலங்கை படையினர் உஷார் நிலையில்!!

அமெரிக்க படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியான பின்பு குறித்த பயங்கரவாதிகளுக்கிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரைப் பின்பற்றுபவர்களால் எந்த விதத்திலும் பதிலடி கொடுக்கும் அபாயம் உள்ளது.

இதற்கமைய இலங்கைக்கும் எச்சரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்லாமிய பயங்கரவாத நடத்தைகள் குறித்து இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளநிலையில், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிவப்பு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை, இராணுவம் மற்றும் பிற புலனாய்வு பிரிவுகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இலங்கை அரசியல் மிக முக்கியமான ஒரு தருணத்தில் இருப்பதனால் எந்தவகையிலாவது ஆபத்து நிகழ்ந்தால் அது ஒரு அரசியல் குழப்பமாக இருக்கும் என்பதால் நாட்டின் பாதுகாப்பு குறித்து உன்னிப்பாக கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor