வவுனியாவில் முன்னாள் போராளி திடீர் மரணம்!

வவுனியாவில் முன்னாள் போராளியான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் இரவு உறக்கத்துக்கு சென்று சிலமணிநேரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா பறனாட்டகல் பகுதியில் வசித்து வந்த பேரின்பநாதன், வயது 35 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த நபர், நேற்றையதினம் (27.10.2019) அதிகாலை 12 மணியளவில் தனது மனைவியுடன் உரையாடிவிட்டு உறங்குவதற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் உறங்கிய சில நிமிடங்களில் அவரின் உறக்கத்தில் மாற்றம் ஒன்றை உணர்ந்த மனைவி அவரை எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை.

இந்நிலையில் அயலவர்களை அழைத்துள்ளதுடன், பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது.

இவ்வாறு இறந்தவர் புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியாவார்.

குறித்த நபர் சில நோய்களுக்காக வைத்திய சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor