சவேந்திர சில்வாவிற்கு பதவி நீடிப்பு

இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ளார்.

ஜூன் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இவருடைய பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ பதவி நிலை பிரதாணியாக 2019 ஜனவாரி 9 ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன் கஜபா படையணி மற்றும் கமாண்டோ படையணியின் படைத் தளபதியாக இருந்தார்.

2009ம் ஆண்டு இறுதிக் கட்டப் போரின் போது 58ம் படைப் பிரிவிற்கு சவேந்திர சில்வா தலைமை தாங்கினார் எனவும் அவரது கட்டளைகளின் அடிப்படையில் இயங்கிய படையினருக்கு எதிராக குறறச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor