மக்களின் எதிர்ப்பால் காணி அளவீடு நிறுத்தம்.

மாதகல்- பொன்னாலை வீதியில் தனியாா் காணியை கடற்படையின் தேவைக்காக 4 ஏக்கா் காணியை சுவீகாிக்கும் நடவடிக்கை பொதுமக்களுடைய கடுமையான எதிா்ப் பினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி கடற்படை முகாமுக்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிந்த உள்ளூர் மக்கள் இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் திரண்டனர்.

வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோரும் அங்கு வருகை தந்தனர். 

இந்த நிலையில் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் அங்கு வருகை தந்தனர். அவர்கள் அளவீட்டுப் பணிகளை முன்னெடுக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அதனால் மக்களிடமிருந்து எழுத்துமூல மனுவைப் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்