தேர்தல் கடமையில் 2 இலட்சம் அரச ஊழியர்கள்.

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஏ.எஸ்.பி.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் இவர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் கடமைகளுக்கு அரச ஊழியர்களை ஈடுபடுத்தும் விதமாக திட்டம் தயார் செய்யப்பட்டு அதனை அமுல்படுத்துவற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாக்கெண்ணும் பணிகளில் மாத்திரம் சுமார் 48 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனைவிட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் வாக்களிப்பு நிலையப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை நலன்புரி மற்றும் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்