ஈராக் – அமெரிக்க கூட்டுப் படைகளின் விமான தாக்குதல்!!

ஈராக்கின் நினேவே மாகாணத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது நேற்று (திங்கட்கிழமை) அரசப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் உயிரிழந்ததுடன், பலர் உயிர்த்தப்பும் வகையில் பாலைவனப்பகுதிகளை நோக்கி தப்பியோடியுள்ளனர்.

அவர்களில் சிலர் யூப்ரெட்டஸ் நதிக் கரையோரம் அமைந்துள்ள புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அங்கிருந்தவாறு அவ்வப்போது கொரில்லா போர்முறை பாணியில் அதிரடியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், ஈராக்கின் நினேவே மாகாணத்தில் உள்ள வாடி அல்-கிஸ்ஸாப் என்ற இடத்தில் சில பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்து பதுங்கி இருப்பதாக ஈராக் உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அப்பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor