மஹிந்தவின் தீபாவளி வாழ்த்து

அறியாமை எனும் இருளை அகற்றி அறிவு எனும் ஒளியை கொண்டு வருவதே மனித குலத்தின் நித்திய சவாலாகும். அதாவது தீமையை அகற்றி நன்மையை நிலைநாட்டுவதாகும். இந்து மதத்தின் ஆன்மீக விழுமியங்கள் மற்றும் மரபுகளுக்கேற்ப இது சிறந்ததொரு வாழ்க்கைக்கான முன்னேற்றத்திற்குரிய எண்ணக்கருவாகவும் அமைகின்றது.என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குரிப்பிடப்படுள்ளதாவது,

உலகம் முழுவதிலும் வாழுகின்ற இந்துக்கள் இன்றைய தினத்தில் தீபாவளி திருவிழாவை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அனைத்து இனங்களுக்கிடையிலும் நட்பு மற்றும் சமத்துவம் என்பவற்றினை வலியுறுத்துகின்ற இந்து மக்களிடையே தீபாவளி விழாவானது மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றது.

இந்து சகோதர சகோதரிகளுக்கு இத்தீபாவளிச் செய்தியின் ஊடாக மிகவும் அமைதியான மற்றும் மகிழ்ச்சிகரமான எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன். உலகவாழ் இந்து பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதும் ஒளிமயமானதுமான தீபாவளி தினமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்