வீட்டுக்குள் மீட்கப்பட்ட போதைப்பொருள் துப்பாக்கி..!!

செந்தனியில் வீடு ஒன்றுக்குள் ஆயுதங்கள் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்தவார செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Espace De Geyter பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் ஆயுதங்கள், போதைப்பொருட்கள், ரொக்கப்பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் தலையிட்டு சோதனை நடத்தியதில் இவை மீட்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஊசிகள் பலவும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.

விசாரணைகளின் படி, தொழில்நுட்பவியலாளர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அவரலாயே இது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.


Recommended For You

About the Author: Editor