தீயில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கட்டிடத்தில் இருந்து குதித்த நபர்..!!

57 வயதுடைய நபர் ஒருவர் தீ விபத்தில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள கட்டிடத்தில் இருந்து வெளியே பாய்ந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை Alfortville, (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Les Hirondelles d’Alfortville விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவரே கீழே குதித்துள்ளார்.

குறித்த உணவகத்தில் திடீரென தீ பரவியுள்ளது. அறை ஒன்றில் தங்கியிருந்த குறித்த நபரின் அறைக்குள் தீ பரவி, அவரின் கை மற்றும் காலில் தீ பரவியுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் மூன்றாவது தளத்தில் இருந்து வெளியே குதித்துள்ளார்

தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பலத்த காயமடைந்த நபர் உயிருக்கு போராடி வருகின்றார். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Recommended For You

About the Author: Editor