ஐரோப்பிய நாட்டில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் வெரோனா நகரத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த நிஷான் பெர்னாண்டோ வர்ணகுலசூரிய என்ற 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் சாரதியாக செயற்பட்டவர் திடீர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

அவர் தனது நிறுவனத்தின் பொதிகளை பகிர்வதற்காக வீடு ஒன்றிற்கு சென்றுள்ளார். இதன் போது அவர் ஓட்டிய வாகனத்தின் பின் கதவை திறக்கும் போது திடீரென இயங்கிய வாகனம், பின் நோக்கி பயணித்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தான் ஓட்டிய வாகனத்தின் பிரேக் சரியாக இயங்காமையே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor