புகைப்படம் மூலம் மார்பக புற்றுநோயை கண்டறிந்த பெண்!

ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்ணொருவர், தெர்மல் கேமராவில் எடுத்த புகைப்படம் மூலம் தனக்கு மார்பக புற்றுநோய் துவக்க நிலையில் இருப்பதை கண்டறிந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

41 வயதான பேல் கில் என்ற அந்த பெண்மணி எடின்பர்க் நகரிலுள்ள கேமரா ஆப்ஸ்க்யூரா அருங்காட்சியகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றதன் நினைவாக அங்கிருந்த தெர்மல் கேமராவில் புகைப்படமும் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த போது வெப்பமான பகுதிகளை குறிக்கும் வகையில் சிவப்பாக பதிவாகியிருந்தது.

இதுகுறித்து இணையத்தில் தேடிப்பார்த்த போது, அவை மார்பக புற்றுநோயை குறிப்பதாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அந்த புகைப்படத்துடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை, முறையாக பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மார்பக புற்றுநோய் துவக்க நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை பெற்று வருகிறார்.


Recommended For You

About the Author: Editor