ஆஸ்திரேலிய பிரதமரின் தீபாவளி வாழ்த்து!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ((Scott Morrison)) தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில், வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

அனைவருக்கும் வணக்கம் என்பதை, இந்தியில் கூறி தனது வாழ்த்தினை தொடங்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தீப ஒளி திருநாளை, தாம் எப்போதும் வரவேற்பதாக கூறியிருக்கிறார்.

நாம் ஒவ்வொருவரோடு பகிர்ந்து கொள்ளும் மதிப்பையும், நம்பிக்கையையும் கொண்டாடுவதால், தீப ஒளித் திருநாளை தாம் எப்போதும் விரும்புவதாகத் ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்திருக்கிறார்.


Recommended For You

About the Author: Editor